search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் வினியோகம்"

    வருகிற 20-ந் தேதிக்குள் நாகை மாவட்டம் முழுவதும் மின் வினியோகம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். #Gajastorm

    வேதாரண்யம்:

    கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இங்கு ஒரு மாதமாகியும் மின் இணைப்பு பெறமுடியாமல் பல கிராமங்கள் உள்ளன. புயலில் பல்லாயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து விட்டதால் அவைகளை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மின் மாற்றிகளும் சேதமானதால் திருவாரூர் மாவட்ட மின் மாற்றி மூலம் பிராந்தியக்கரை, மூலக்கரை ஆகிய இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக வேதாரண்யத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வேதாரண்யம் தாலுகாவில் புயலால் விழுந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் 4300 பேர் ஈடுபட்டுள்ளனர். 6 மின் மாற்றிகள் நாளை முதல் செயல்பட தொடங்கும். இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட மின் மாற்றியில் இருந்து மின் சாரம் பெறும் பிராந்தியக்கரை, மூலக்கரை பகுதிகளுக்கும் நாகை மாவட்ட மின் மாற்றி மூலம் மின்சாரம் வினியோகிக்கப்படும்.

    வருகிற 20-ந் தேதிக்குள் நாகை மாவட்டம் முழுவதும் மின் வினியோகம் வழங்கப்படும். படகு மூலம் வண்டல், அவரிகாடு பகுதிகளுக்கு செல்ல வேண்டி இருப்பதால் அங்கு பூமிக்கடியில் கேபிள் அமைத்து மின்சாரம் வழங்க மின்துறை அமைச்சர் மூலம நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது உயர் அழுத்த மின் சம்பவங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நிறைவடைந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm

    மேட்டூர் பகுதியில் பராமரிப்பு பணி நாளை மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்யோகம் இருக்காது.
    மேட்டூர்:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் வினியோக கழகம் சார்பில் மேட்டூர் நகர் துணைமின்நிலையம் மற்றும் கொளத்தூர் துணைமின் நிலையம் ஆகிய மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (12-ம்தேதி) மேற்கொள்ளப்படுகிறது. 

    ஆகவே இந்த துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட மேட்டூர்நகரம், மாதையன்குட்டை, நவப்பட்டி, கோல்நாயக் கன்பட்டி, புதூர், கொளத்தூர், பெரியதிண்டா, நீதிபுரம், காவேரிபுரம், சின்னதன்டா, கண்ணாமூச்சி, காவிந் தபாடி, தின்னப்பட்டி, பாலமலை, அய்யம்புதூர், ஆலமரத்துப்பட்டி, சுப்பிரமணியபுரம், பண்ண வாடி, குரும்பனூர், சவேரி யார்பாளையம், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை(12-ம்) தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 வரை மின் வினியோகம் இருக்காது. 

    இந்த தகவலை மேட்டூர் செயற்பொறியாளர் சேகரன் தெரிவித்தார்.
    ஆதனக்கோட்டை பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதி புரம், பெருங்களூர்,தொண்டமான் ஊரணி, வாரா ப்பூர்,அண்டக்குளம், மண விடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தான் குடி ,காட்டுநாவல், மட்டையன் பட்டி, 

    மங்களத்துப்பட்டி,அக்கச்சிப்பட்டி,கந்தர்வக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கந்தர்வக்கோட்டை மின்சார வாரிய  உதவி செயற்பொறியாளர் சேவியர் தெரிவித்துள்ளார்.
    ×